ரிஷபத்திற்கு அதிகரிக்கவுள்ள தனவரவு ஆனால் மூன்று ராசியினருக்கு ஏற்படவுள்ள சிக்கல் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasu
1 year ago
ரிஷபத்திற்கு அதிகரிக்கவுள்ள தனவரவு ஆனால் மூன்று ராசியினருக்கு ஏற்படவுள்ள சிக்கல் - இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி : உங்கள் செயல்கள் வெற்றியாகும். லாபம் அதிகரிக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள்.
பரணி : நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். பொருளாதார நிலை உயரும்.
கார்த்திகை 1: எதிர்பார்த்த தகவல் வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : அலைச்சலும் செலவும் இன்று அதிகரிக்கும் என்றாலும் அவற்றால் ஆதாயம் உண்டாகும்.
ரோகிணி : வெளியூர் பயணத்தால் பயன் உண்டாகும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
மிருகசீரிடம் 1, 2 : வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

மிதுனம்
மிருகசீரிடம் 3, 4 : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள்.
திருவாதிரை : பழைய கடன் வசூலாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3 : உங்களுடைய நேற்றைய எண்ணம் ஒன்று நிறைவேறும் நாள்.

கடகம்
புனர்பூசம் 4 : இழுபறியாக இருந்து வந்த முயற்சி நிறைவேறும் நாள்.
பூசம் : எதிர்கால வாழ்க்கைக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.
ஆயில்யம் : நண்பர், உறவினர் உதவியால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

சிம்மம்
மகம் : இரண்டு நாட்களாக இருந்த சங்கடம் விலகும். உங்கள் முயற்சி நிறைவேறும்.
பூரம் : புதிய முயற்சி பலன்தரும். நெருக்கடி விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்தரம் 1 : உங்கள் செயலில் இன்று வெற்றி பெறும். எதிர்பார்த்தவற்றில் லாபம் காண்பீர்கள்.

கன்னி
உத்திரம் 
2, 3, 4 : உங்கள் செயலில் எதிர்பாராத தடையை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
அஸ்தம் : முயற்சியில் பொறுமை அவசியம். செலவு அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும்.
சித்திரை 1, 2 : புதிய முயற்சி இன்று வேண்டாம். வழக்கமான பணிகளில் கவனமுடன் செயல்படுங்கள்.

துலாம்
சித்திரை 3, 4 : நண்பர்களால் உங்கள் வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் .
சுவாதி : எதிர்பாலினர் அன்பிற்கு ஆளாவீர்கள். இருப்புகள் கரைய வாய்ப்புண்டு என்பதால் கவனம் தேவை.
விசாகம் 1, 2, 3 : தம்பதிகளுக்குள் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4 : வியாபாரத்தை விரிவு செய்வீர்கள்.விரோதிகள் விலகிச் செல்வார்கள்.
அனுஷம் : உங்கள் செயல்களில் இருந்த தடை விலகும். விரும்பியதை அடைந்து மகிழ்வீர்கள்.
கேட்டை : திட்டமிட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் முயற்சியில் நன்மை உண்டாகும்.

தனுசு
மூலம் : தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். சொத்து விவகாரத்தில் வெற்றி அடைவீர்கள்.
பூராடம் : பழைய நட்புகளால் இன்று சில பிரச்னைகளை சந்திக்க நேரும். எச்சரிக்கைத் தேவை.
உத்திராடம் 1: செயல்கள் இழுபறி ஆனாலும் போராடி வெற்றி காண்பீர்கள்.உங்கள் செல்வாக்கு உயரும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : அரசாங்க விவகாரங்களில் நிதானம் தேவை. இல்லையெனில் சட்ட சிக்கல் ஏற்படும்.
திருவோணம் : அறிமுகம் இல்லாதவருடன் எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.
அவிட்டம் 1, 2 : மற்றவரின் வார்த்தைகளைக் கேட்டு மனதை அலைபாய விடாதீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
சதயம் : உங்கள் எண்ணப்படி செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
பூரட்டாதி 1, 2, 3: ஆரோக்யத்தில் உண்டான சங்கடம் விலகும். துணிச்சலுடன் நினைத்ததை சாதிப்பீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4 : புதிய முதலீடுகள் இன்று வேண்டாம். பண விவகாரங்களில் கவனம் தேவை.
உத்திரட்டாதி : குடும்பத்தினர் வழியில் எதிர்பாராத செலவு ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
ரேவதி: அரசு வழி முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். ஒருசிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.