இலங்கையின் பிரச்சனையை தீர்க்குமாறு ஜி20 நாடுகளை கேட்டுக்கொண்ட சீனா!

#SriLanka #India #China #America #Meeting #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
இலங்கையின் பிரச்சனையை  தீர்க்குமாறு ஜி20 நாடுகளை கேட்டுக்கொண்ட சீனா!

உலகின் மிகப்பெரிய கடன் வழங்குனராகக் கருதப்படும் சீனா, ஜி20 நாடுகளை இலங்கையின்  பிரச்சினையை ஆழமாக ஆராய்ந்து, திறம்படத் தீர்க்க தலையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கை போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு வழங்கப்படும் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் அமெரிக்க மற்றும் சீன நிதித்துறை அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் ஜி20 நிதி மாநாட்டை ஒட்டி இந்த விவாதம் நடைபெற்றது.

அமெரிக்கா மற்றும் சீனாவின் நிதித்துறை அதிகாரிகளும் இதில் இணைந்திருந்தனர்.

இந்த இரண்டாம் கட்ட கலந்துரையாடலில் சீன கடன் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கை போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு சீனா வழங்கிய கடன்களை மறுசீரமைப்பதை அமெரிக்கா தாமதப்படுத்தியதாக  விமர்சனம் செய்த பின்னணியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

உலகின் மிகப்பெரிய கடன் வழங்குனராகக் கருதப்படும் சீனா, ஜி20 நாடுகளை இந்தப் பிரச்சினையை ஆழமாக ஆராய்ந்து, திறம்படத் தீர்க்க தலையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4