யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் இன்று யாழ்ப்பாணம் வருகை!
#SriLanka
#Jaffna
#Lanka4
#Bishops
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் ஆனி மாதம் 29ஆம் திகதி நியமனம் பெற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் ஆடி மாதம் 01ஆம் திகதி புதன்கிழமை இன்று யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இன்றைய தினம் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் மற்றும் குருக்களால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்ட பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் குருக்களுடனான கலந்துரையாடலிலும் பங்குபற்றினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே