நாளை நாம் ஆவோம் நல்லபடி ஒரு ஆளாய். அன்னை தாங்கிய மடியில் தூங்கும் சுகமும் வேண்டும் வாழ்வு நலமாகிட. இன்றைய கவிதை 25-02-2023.

#கவிதை #தொழில் #இன்று #தகவல் #லங்கா4 #Poems #work #today #information #Lanka4
நாளை நாம் ஆவோம் நல்லபடி ஒரு ஆளாய். அன்னை தாங்கிய மடியில் தூங்கும் சுகமும் வேண்டும் வாழ்வு நலமாகிட. இன்றைய கவிதை 25-02-2023.

நாளை நாம் ஆவோம்
நல்லபடி ஒரு ஆளாய்
***********************************

அன்னை தாங்கிய
மடியில் தூங்கும்
சுகமும் வேண்டும்
வாழ்வு நலமாகிட.

தந்தை காட்டும்
தொழில் முயற்சி 
பாதை வேண்டும்.
உழைத்து வளர்ந்திட.

இவை இல்லை
வாழ்வு மாறும்.
நாளை இந்த சமூகம்
தோற்றுப் போகும்.

தேற்றி போகும் 
நல்ல சூழல்
மாறி தானும் 
வந்தால் நன்றே!

நல்ல தாய் தந்தை
நாட்டுக்கு வரம்.
அந்த வரத்தை
நாமே ஆக்கிடல் மேல்.

சமூகப் பொறுப்பு
இங்கே பாரும்
வெறுமை ஆகிடல்
வறுமை தந்து நிற்கும்.

பொறுப்பு சுமந்து
நடத்திட மறந்தால்
நாமே நடப்போம்
நல்வழி கண்டு தனியே!

நாளை தடுப்போம்
நம் சமூகத்தில்
இந்த துயர் தனை.
மனதால் மாறியே!

குறை வழி மனதை
இசைந்திட தடுத்து
முயன்றிட செய்வோம்.
நாளை நாம் நலமாக.

நம் சேய்கள் நாளை
இது போல் ஆகாது
நாம் வாழ்ந்திட தானே
நம் மனதை மாற்றுவோம்.

                                                                                                      ....... அன்புடன் நதுநசி.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4