ப்ராஜெக்ட்டுகளுக்காக பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ்

#Vijay #Actor #Director #Cinema #TamilCinema #Tamilnews #Lanka4
Kanimoli
3 years ago
ப்ராஜெக்ட்டுகளுக்காக பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் ப்ராஜெக்ட்டுகளுக்காக பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். இதற்கு இடையில் அவர் இப்போது ஒரு பிரம்மாண்ட வீட்டையும் வாங்கி இருக்கிறார். நடிகர் விஜய் எப்படி ஒரு பிரம்மாண்டமான அலுவலகத்தை அடுக்குமாடி குடியிருப்பில் உருவாக்கி நடத்தி வந்தாரோ அதேபோன்று லோகேஷும் பிரம்மாண்ட அலுவலகம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

அதாவது கேகே நகரில் இருக்கும் ஒரு ஆடம்பர அப்பார்ட்மெண்ட்டை வாங்கி இருக்கும் லோகேஷ் அதன் முதல் தளத்தை அப்படியே அலுவலகமாக மாற்றி விட்டாராம். மேலும் அந்த அலுவலகத்தில் சகல வசதிகளும் இருக்கும்படி அவர் தயார் செய்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அதே அப்பார்ட்மெண்ட்டின் கடைசி தளத்தையும் அவர் வாங்கி இருக்கிறார்.

அதில் அவர் குடும்பத்துடன் வசிப்பதற்கான பிரம்மாண்ட வீட்டை உருவாக்கும் முடிவில் இருக்கிறாராம். ஏற்கனவே லோகேஷ் போயஸ் கார்டனில் ஒரு வீட்டை வாங்கி இருக்கிறார். அதை தொடர்ந்து இப்போது கே கே நகரிலும் வீடு, அலுவலகம் என இரண்டையும் பல கோடிகளை கொடுத்து வாங்கி இருக்கிறார்.

மேலும் அலுவலகம் மற்றும் வீடு இரண்டையும் பிரம்மாண்டமாகவும், ஆடம்பரமாகவும் உருவாக்குவதற்கான அனைத்து வேலைகளும் இப்போது செய்யப்பட்டு வருகிறது. இதுதான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே டாப் கியரில் செல்லும் லோகேஷுக்கு இப்போது அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டி இருக்கிறது. அதை நன்றாக புரிந்து கொண்ட லோகேஷும் வேகவேகமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4