'ஆர்ஆர்ஆர்' படத்துக்கு மேலும் 4 சர்வதேச விருதுகள்

#Cinema #TamilCinema
Mani
3 years ago
'ஆர்ஆர்ஆர்' படத்துக்கு மேலும் 4 சர்வதேச விருதுகள்

ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பிற மொழிகளில் வெளியான RRR திரைப்படம் சர்வதேச விருதுகளில் ரூ.1,200 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது.

ஆஸ்காருக்கு அடுத்த உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு கிடைத்தது. கிரிடிக் சாய்ஸ் விருதுகளும் கிடைத்தன.

இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருது விழாவில் ஆர்ஆர்ஆர் படம் சிறந்த சர்வதேச படம், சிறந்த ஆக்ஷன் படம், சிறந்த பாடல், சிறந்த சண்டை என நான்கு விருதுகளை பெற்றுள்ளது.

இந்த விருதுகளை ராம்சரண், ராஜமவுலி, கீரவாணி ஆகியோர் நேரில் சென்று பெற்றுக்கொண்டனர்.நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் ஆஸ்கார் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4