உக்ரைனுக்கு மேலும் 2 பில்லியன் டாலருக்கு ஆயுத உதவி வழங்குவதாக அறிவித்த அமெரிக்கா

#Russia #War #Ukraine #United_States #Dollar #Weapons #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
உக்ரைனுக்கு மேலும் 2 பில்லியன் டாலருக்கு ஆயுத உதவி வழங்குவதாக அறிவித்த அமெரிக்கா

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. 

உக்ரைனுக்குத் தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. 

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. 

ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு 2 பில்லியன் டாலர்கள் ஆயுத உதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைனுக்கு 

அமெரிக்கா வழங்கும் ஆயுத உதவியின் மொத்த மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 16 ஆயிரத்து 586 கோடியே 71 லட்ச ரூபாய் ஆகும். உக்ரைன் போர் ஓராண்டைக் கடந்துள்ள நிலையில் ரஷியாவுக்கு சீனா ஆயுத உதவிகளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4