ஆறாவது முறையாக உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி!
8 வது பெண்கள் டி20 உலக கோப்பை தென் ஆப்பிரிக்காவில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது இதில் பத்து அணிகள் பங்கேற்றன நேற்று இறுதிப் போட்டி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் தென் ஆப்பிரிக்காவும் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது கீப்பர் அலிசா ஹீலியும் , பெத் மூனியும் தொடக்க அணி வீரர்களாக களம் இறங்கி பொறுமையாக விளையாடினார்கள் 6 ஓவர் முடிவில் 36 ரன்கள் எடுத்து ஜோடி பிரிந்தது
பின்பு களமிறங்கிய கார்ட்னெர் சிறப்பாக ஆட்டம் வெளிப்படுத்தினார் 29 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
பெத் மூனி நெருக்கடி நேரத்தில் பொறுமையை விளையாடி 18 வது அரை சதத்தை பூர்த்தி செய்தார் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 156 ரன் சேர்த்தது தென்னாப்பிரிக்கா தரப்பில் ஷப்னிம், இஸ்மாயில் , மரிஜானே காப் தல 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
லாரா வோல்வார்த்தும், தஸ்மின் பிரிட்சும் அடியெடுத்து வைத்தனர். ஆரம்பத்தில் ஒருவித பதற்றத்துடன் தென்ஆப்பிரிக்க வீராங்கனைகள் விளையாட, அதை சரியாக பயன்படுத்தி ஆஸ்திரேலிய பவுலர்கள் மிரட்டினர். 'பவர்-பிளே'யான முதல் 6 ஓவர்களில் 3 பவுண்டரி மட்டுமே வழங்கி சிக்கனத்தை காட்டினர். தஸ்மின் பிரிட்ஸ் 10 ரன்னிலும், அடுத்து வந்த மரிஜானே காப் 11 ரன்னிலும், கேப்டன் சன் லூஸ் 2 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். அப்போது தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுக்கு 54 ரன்களுடன் தள்ளாடியது.
லாரா வோல்வார்த் மட்டையை அதிரடியாக சுழற்றினார். தாலியா மெக்ராத், வார்ஹாம் ஓவர்களில் சிக்சர் விளாசி உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். நெருக்கடியும் ஓரளவு குறைந்தது. ஆனால் முக்கியமான கட்டத்தில் லாரா வோல்வார்த் (61 ரன், 48 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) மேகன் ஸ்கட்டின் பந்து வீச்சில் முட்டிப்போட்டு விரட்ட முயற்சித்து எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. அவரது விக்கெட் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. அதன் பிறகு சோலே டிரையான் (25 ரன்) கிளீன் போல்டாக, அத்துடன் தென்ஆப்பிரிக்காவின் நம்பிக்கை முற்றிலும் சீர்குலைந்தது.
20 ஓவர் முழுமையாக ஆடிய தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுக்கு 137 ரன் எடுத்தது, இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 19 இரண்டு வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
பெத் மூனி ஆட்ட நாயகி விருதையும், ஆல்ரவுண்டராக ஆஷ்லி கார்ட்னெர் தொடர் தொடர் நாயகி விருது பெற்றார், உலக கோப்பையில் ஆஸ்திரேலியா தனது ஆறாவது வெற்றி பதிவு செய்தது 2010 2012 2014 2018 2020 2023 கோப்பைகளை வென்று சரித்திரம் படைத்தது.