மார்ச் 8ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானம்

#Protest #Minister #Police #doctor #Arrest #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
 மார்ச் 8ஆம் திகதி முதல்  வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானம்

 மார்ச் 8ஆம் திகதி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

வைத்தியர்கள்,பொறியாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் என அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வல்லுநர்கள் இந்த கூட்டணியில் இணைந்துள்ளனர். மார்ச் முதலாம் திகதி அனைத்து துறைகளிலும் ஏனைய தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் கூட்டமைப்பும் இணைந்து கொள்கிறது.

ஏனைய தொழிற்சங்கங்களை தொடர் வேலை நிறுத்தத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (27) இடம்பெறவுள்ளதாகவும், அதன் பின்னர் தொழில் நடவடிக்கை குறித்து அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தொழிற்சங்கத்தின் பிரதிநிதி தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4