QR குறியீட்டு முறைமை இடைநிறுத்தம்: எரிசக்தி அமைச்சர் காஞ்சன வெளியிட்டுள்ள தகவல்

#SriLanka #Fuel #Minister #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
QR குறியீட்டு முறைமை இடைநிறுத்தம்: எரிசக்தி அமைச்சர் காஞ்சன வெளியிட்டுள்ள தகவல்

தேசிய எரிபொருள் உரிமம் QR குறியீடு முறையை ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எவ்வாறாயினும், எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
இதுவரை வழங்கப்பட்ட ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரிக்க தேசிய எரிபொருள் ஒதுக்கீடு தரவு பகுப்பாய்வு செய்யப்படும்.

அடுத்த சில மாதங்களில் நிதி அமைச்சு மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4