வட்டுக்கோட்டை பகுதியில் பல திருட்டுக்களுடன் தொடர்புடைய திருடன் கைது

#Robbery #Jaffna #Arrest #Police #sri lanka tamil news #Tamilnews #Lanka4
Kanimoli
3 years ago
வட்டுக்கோட்டை பகுதியில் பல திருட்டுக்களுடன் தொடர்புடைய திருடன் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் பல திருட்டுக்களுடன் சம்பந்தப்பட்ட நிலையில் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு பகுதியில் தலைமறைவாகி இருந்தார். அவருக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டவேளை காஸ் சிலிண்டர், உலர் உணவுப் பொருட்கள், தராசு என்பன அவரிடமிருந்து மீட்கப்பட்டன.

குறித்த சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4