கதை வழி இனி பெண்ணடிமை வேண்டாம். கொஞ்சம் நின்று என் கதை கேட்டு ஒரு பதில் சொல்லும். ஏன் இப்படி என. இன்றைய கவிதை 28-2-2023.

கதை வழி இனி
பெண்ணடிமை வேண்டாம்.
=============================
கொஞ்சம் நின்று
என் கதை கேட்டு
ஒரு பதில் சொல்லும்.
ஏன் இப்படி என.
நம்மை நாமே
இழிவு செய்து
மற்றவர் புகழை
பாடித் திரியவோ?
தேடிய இடம்
எங்கும் இல்லை.
அவரைப் புகழ
ஒரு குறிப்பும்.
நான் சொன்னது
இன்னும் இல்லை
நன்றே புரிந்து
கொள்ள தானும்.
அது தான் தன்.
பெண்ணை அவன்
காட்டுக்கு விட்டு
நாட்டில் இரங்கியதை.
வாக்கு காக்க
தியாகம் என்றான்.
தன்னை மட்டும்
நம்பியவளை விடுத்து.
நாட்டு மக்கள்
நலன் என்று
வீட்டுப் பெண்டீரை
கானகம் விட்டவர்.
தன் வீட்டுக்கு
மாற்றான் மனை
சிறைகாவி வந்தும்
கண்ணியம் காத்து.
தன் தங்கை
மூக்கை கொய்த அந்த
இரக்கம் இல்லா
ஈனருக்கு வலிக்க
தக்க பாடம்
சொல்லிக் கொடுத்து;
பாசம் புரிய
வைத்து நின்றவனை.
கொன்று விட்டு அவன்
சொத்தை கொள்ளை;
இட்டு சென்றவனை
வணங்கி நிற்கவோ?
மனைவியை மீட்டு
அந்த மரமண்டை
காடு விட்டான் - அந்த
கற்பவதியை காணாதோ?
அவனுக்கு ஒரு கேடு
எண்ணாத அந்த
பெண்ணுக்கு எப்படி
கேடு இட்டான் அந்த பாவி.
செய்தது போக - அவன்
நீதி பேசி தன்
குற்றம் மறைத்து
விளக்கம் வேறு.
தம்பி சொல்லிய
அண்ணி அன்னியம்
ஆனது கண்டேன்
இந்த புராணம் வழி.
பொய்க்கு புழுகி
புதுக் கதை புனைந்து
பழி சுமத்தி அவர்
போர் செய்தது சரியா?
எதிர்த்து பேசினால்
கொன்று போவார்.
என்று நின்று நாம்
பழி சுமந்து சாகவோ?
ஈற்றில் இறப்பு
உறுதி ஆனால்
சேற்றில் மாண்டு
இறந்தால் என்ன?
வீட்டில் எரிந்து
சாம்பல் ஆகி
நீரில் கரைந்து
மறைந்தால் என்ன?
இல்லை வந்து
எதிரி எம்மை
கொன்று போட்டால்
எல்லாம் இறப்பே!
வீழும் அந்த இறுதி
நொடியிலும் பார்;
என் விரும்பில் நான்
வீரனாய் மரிப்பேன்.
சொல்லி நின்று
வாழ்ந்து போனவன்.
அவனைத் தான் நாம்
வணங்கத் தகும்.
எம்மிடம் பறித்து
எம்மிலும் தாம் பெரிதாய்
பொறித்துக் காட்டினால்
பொரித்தெடு இனியாகிலும்.
பெண்மை மதித்து
மென்மை சொன்னால்
இன்பம் தந்து ஆங்கே
வன்மை காட்டும்;
பெண்டீர் வேண்டும்.
எழுத்தில் இனி
நியத்தை புதைத்து
கலந்து கொடுப்போம்.
விதையாகி அது
நாளை முளைக்கும்.
புதிய நாற்றாகி
நிழல் தந்திட.
புராணக் கதையதை
நீதி வழி மாற்றிட
முனைந்திடல் வேண்டும்.
இல்லை அதை விடுத்திடு.
சொந்தம் வழி
பந்தம் வேண்டும்.
தொல்லை எனில்
தூக்கித் தூர எறிந்திடு.
பலமும் பலவீனமும்
உன்னில் தான் உண்டு.
அதை அறிந்து நீ
நடந்தால் ஆகும் மாற்றம்.
மெல்லச் சொல்லும்
என் பேச்சில் இல்லை
உண்மை ஒன்று தானும்.
நின்று கேட்பேன்.
நல்லவை வழி
நாளும் நடக்கலாம்.
தவறென அறிந்தும்
சரியென நடக்கவோ?
மாற்றி வைத்து
மனதால் ஏற்றி வைக்க
மாற்றம் வேண்டும்.
பெண்ணடிமை வேண்டாம்.
........ அன்புடன் நதுநசி.



