மதுரையில், காதல் கணவர் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்ததால், அவரது வீட்டு முன்பு இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை!

#Murder #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
3 years ago
மதுரையில், காதல் கணவர் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்ததால், அவரது வீட்டு முன்பு இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை!

மதுரை திருமங்கலத்தில் காதல் கணவர் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்ததால், அவரது வீட்டு முன்பு இளம்பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். அண்ணா நகரை சேர்ந்த பாண்டீஸ்வரியும் NGO காலனியை சேர்ந்த நவீன் பிரகாசும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் பாண்டீஸ்வரியின் வீட்டில் 2 பேரும் வசித்தநிலையில், நவீன் பிரகாஷ் திடீரென சண்டையிட்டு விட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. நேற்று நவீன் பிரகாஸ் வீட்டுக்கு பாண்டீஸ்வரி சென்றபோது, அங்கிருந்த நவீனின் பெற்றோர், அவர் சென்னை சென்றுவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த பாண்டீஸ்வரி கையில் வைத்திருந்த விஷத்தை அருந்தியுள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

பாண்டீஸ்வரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை பாண்டியராஜா புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் திருமங்கலம் கோட்டாட்சியர் சௌந்தர்யா தலைமையிலும் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4