செல்போனில் பேசிக் கொண்டே தண்டவாளத்தை கடந்து சென்ற கல்லூரி மாணவி மீது ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு

#Murder #Tamil Nadu #Tamil People #Tamil #Tamil Student #Tamilnews #TamilNadu Police
Mani
3 years ago
செல்போனில் பேசிக் கொண்டே தண்டவாளத்தை கடந்து சென்ற கல்லூரி மாணவி மீது ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே செல்போனில் பேசிக் கொண்டே தண்டவாளத்தை கடந்து சென்ற கல்லூரி மாணவி மீது ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த நிகிதா தாம்பரத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் மழலையர் பள்ளியில் பகுதி நேர ஆசிரியர் பணி கிடைத்ததையடுத்து முதல் நாள் பணிக்கு செல்லும்போது இரும்புலியூர் அருகே குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.

செல்போனில் பேசிக்கொண்டே ரயில் தண்டவாளங்களை கடக்க வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து எச்சரித்தாலும், அதனை அலட்சியப்படுத்துவதன் விளைவாக இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4