உண்மை உறங்காது உயிர்ப்போடு உறையும். உளறிக் கொண்டு ஊர் சுற்றும் இந்த ஒற்றைப் பார்வைக்கு உண்மை புரியாது. இன்றைய கவிதை 01.03-2023.

உண்மை உறங்காது
உயிர்ப்போடு உறையும்.
**************************************
உளறிக் கொண்டு
ஊர் சுற்றும் இந்த
ஒற்றைப் பார்வைக்கு
உண்மை புரியாது.
துணிந்து போச
வாய்ப்பு இருந்தது.
பேசி விட்டார் ஒருவர்.
அமைதி நிலவுகிறது.
உண்மை இது.
அப்படி இல்லை.
அமைதியாக ஒரு
போர் நடந்தது அன்று.
காடையர் கையில்
கட்டையை கொடுத்து.
கொல்லச் சொன்னது
அந்த நாட்டு அரசு.
உண்மை தான் இது.
உண்மையில் பாரும்
குடியுருமையை தான்
நீக்கி இருக்க வேண்டும்.
ஆனால் அதனை ஏன்
செய்யவில்லை பாரும்.
உண்மை சுட்டுப் போடும்
தடை தானே அதற்கு வரும்.
புத்திசாலி புதுமை
செயலில் தந்திரம்.
விளைவு வெற்றி.
நமக்கு துயரம் மிச்சம்.
இன்றைய ஈழத்தில்
சுதந்திரம் இருக்கு.
பேச்சுரிமை உண்டு.
இது அறியாமையே!
இறந்த கதையை
பேசிடப் பார்க்கும்
அரசுக்கு மௌனம்
பெருமை சூட்டும்.
இந்த கதை வழி
நிகழ்காலத்தைப் பேசி
எதிர் காலத்தை
எழுத முடியுமா?
எழுதிப் பாருங்கள்
ஈழத்தில் இருந்து.
உங்களைப் பற்றி
நாளை ஈழம் எழுதும்.
ஒரு நாடும் போரும்
உறவாடும் முறை
வரலாறு வழி நீளமாக
பரவிக் கிடக்கிறது.
வீரனுக்கு அழகு
நெஞ்சு நிமிர்த்தி
முட்டுக் கொடுத்து
மாண்டு போவதில்லை.
சூழல் புரிந்து
போரில் வென்று
வாழ்ந்து போகும்
சூழல் ஆக்குவதே!
இது விடுத்து
வீராப்பு பேசி
வீணாக மாண்டு
மறைந்து போவதோ?
நூல் வழி பேசும்
கருத்து இருக்கும்.
காலம் கடந்தும்
உயிரோடு தான்.
கிளர்ச்சி செய்து
யாரும் எங்கேயும்
நல்ல பெயர் எடுக்கார்
வெல்லும் வரை.
ஈழத்தில் இன்று
வெறும் மாயை
கண்டேன் தினம்.
போலிப் பேச்சாக.
உண்மை தேடி
ஓடிப் பாரும் வரலாறு.
வெட்டி வீராப்பு
விட்டு உண்மை தேடும்.
ஒளி வீசி நாம்
நலம் வாழ வேண்டும்.
கசந்த போதும் இங்கே
உண்மை வழி வேண்டும்.
நாளை மாறும்
இந்த நிலை
நலமென்று சொல்ல
மனது மறுக்கும்.
நலம் வாழும் சூழல்
இல்லை என்றால்
ஆக்கித்தான் போகும்
தனி நாடு ஒன்றை.
விலை அதிகம்
வாங்கித் தானது
போகும் பாருங்கள்.
சிந்தை வேண்டும்.
நாளைய மாற்றம்
நலமாகிட வேண்டும்.
இனியாகிலும் தேடி
நில்லும் உண்மை வழி.
துப்பாக்கி முனையில்
எழுதுதல் நன்றன்று.
அது இங்கே நல்ல
எடுத்துக்காட்டு இல்லை.
உண்மை மறைத்து
நிழலில் வாழும்
வாழ்வு பொய் புரியும்.
நிழல் மரம் நமதல்ல.
குடை தானும் போதும்
நம் கையில் இருக்கும்.
தேவைக்கு அது உதவும்
முடிவு நம்மிடம் தான்.
நம்மால் முடிந்தது
நம் எண்ணப்படி எல்லாம்
நடந்திட்டால் மட்டுமே.
நிம்மதி தந்து போகும்.
போலிக்கு ஒரு
காட்சி மாற்றம்
ஏமாற்றிப் போகும்
நம்மை நாளையும்.
புத்திசாலி இங்கே.
ஏமாற்றிப் போகலாம்,
நாமும் நாளை ஏமாந்து
போகலாம் இங்கே!
ஏமாற்றிப் போனால்
தந்ததை தந்தவருக்கு
திருப்பி கொடுத்து
எடுத்ததை திருப்புவோம்.
நம்மாலும் முடியும்
எந்த எல்லைக்கும்
சென்று வென்றிட.
வெற்றி ஒன்றே இலக்கு.
....... அன்புடன் நதுநசி



