நமது கல்லீரலை ஆயுள் முழுவதும் பேணிப்பாதுகாக்க தினமும் இவற்றை சமையலில் பயன்படுத்துதல் வேண்டும்.
நமது உடலின் உள்ளுறுப்புகளில் ஒன்றான கல்லீரல் தான் உணவில் காணப்படும் நச்சுக்களையும் கொழுப்புக்களையும் வெளியேற்றி உடலுக்கு தேவையான விற்றமின்களை சேமித்து இரத்தத்தினை சுத்திகரிக்கவும் செய்கிறது.
இத்தகைய தொழிற்பாட்டை புரியும் நம் கல்லீரலை கெடாது ஆரோக்கியமாக தினமும் வைத்திருக்க இந்த உணவு வகைகள் நாம் சேர்த்துக்கொள்ளல் வேண்டும்.
பூண்டு:
பூண்டில் நிறைய விதமான சத்துக்கள் இருந்தாலும் கூட அதில் இருக்கும் சல்பர் மற்றும் செலினியம் சத்தானது கல்லீரலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியதாக இருக்கிறது.
அதனால் நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டில் பூண்டு சேர்த்து கொள்வது கல்லீரலுக்கு நல்லது.
மஞ்சள்:
கல்லீரலில் கொழுப்புகள் எதுவும் சேராமல் இருப்பதற்கு மஞ்சள் சிறந்த பலனை அளிக்கிறது. அதுமட்டும் இல்லாமல் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கவும் மற்றும் புதிய செல்கள் கல்லீரலில் உருவாகவும் இது பயன்படுகிறது.
எனவே தினமும் நாம் சமைக்கும் உணவுகளில் போதிய அளவு மஞ்சள் சேர்த்து சமைத்தல் கல்லீரலுக்கு நல்லது.
திராட்சை:
பொதுவாக திராட்சையில் என்றால் அதில் உள்ள அனைத்து பாகங்களிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இருக்கிறது. அதனால் நாம் திராட்சை அல்லது திராட்சை ஜூஸ் இவை இரண்டில் எதுவாக இருந்தாலும் நாம் சாப்பிட வேண்டும். ஏனென்றால் திரட்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலில் வீக்கம் இருந்தால் அதனை சரி செய்து வழக்கம் போல் ஆரோக்கியமாக செயல் பட உதவும்.
பீட்ரூட்:
இன்று வரையிலும் பீட்ரூடை சமைத்து சாப்பிடுவதில் தான் சத்துக்கள் இருக்கிறது என்று நினைத்து இருக்கிறோம். ஆனால் நாம் பீட்ருட்டை சமைத்து சாப்பிடுவதை விட சாறாக உடலுக்கு எடுத்துக்கொள்வதில் தான் நிறைய சத்துக்கள் இருக்கிறது.
பீட்ரூட் சாறில் உள்ள நைட்ரேட்டுகள் ஆக்சிஜனேற்றியாக செயல்படும். இரசாயன கொழுப்புகள் கல்லீரலுக்கு எதிராக செயல்படும் ஆற்றலை கொண்டுள்ளதால் நாம் பீட்ரூட்டை எடுத்துகொள்ள வேண்டும்.
பச்சை காய்கறியான முட்டை கோஸ், கீரை மற்றும் ப்ரோக்கோலி ஆகிய காய்கறிகளில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் K மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் ஆகிய சத்துக்கள் அனைத்தும் கல்லீரலின் இரத்தத்தை சுத்திகரிப்பதற்கு பயன்படுகிறது. அதனால் இந்த காய்கறிகளை நாம் தினமும் சாப்பாட்டுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.
முடிவில் கல்லீரலை நாம் இவ்வாறு இயற்கையான உணவு வகைகளைக் கொண்டு காப்போமானால் எதிர்காலத்தில் அது சிதைவுறும் தன்மையை அடையாது பேணலாம்.