கிழங்குகள் தரும் நன்மைகள்

#Food #Health #Healthy #World_Health_Organization
Mani
3 years ago
கிழங்குகள் தரும் நன்மைகள்

உருளைக்கிழங்கு:
உலகின் பெரும்பாலான மக்கள் உணவில் அதிக அளவில்  சேர்த்துக்கொள்ளும் கிழங்கு வகைகளில்  முதலிடம் உருளைக் கிழங்கிற்குதான். உருளைக் கிழங்கில் அரிசியில் உள்ளதைவிட அதிகமான மாவுச்சத்து உள்ளது. இதில் மாவுச்சத்தும் உயிர்ச் சத்துகளும் உள்ளன.மேலும், இதில் அதிகமான கார்போஹைட்ரேட், கலோரிகள், வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

பீட்ரூட்: 
இனிப்புத்தன்மை அதிகம் கொண்ட இந்தக் காய் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அதிக அளவு குளுக்கோஸ் சத்து நிறைந்தது. ரத்தத்தை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு.

சேப்பங் கிழங்கு: 
சேப்பங்கிழங்கில் நான்கு வகை சேப்பைக்கிழங்குகள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, பி என்ற உயிர்ச்சத்தும் இரும்பு மற்றும் புரதச்சத்தும்  அதிகம் உள்ளன.

மரவள்ளிக் கிழங்கு:
இனிப்புச்சுவை நிறைந்த இந்த கிழங்கு உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. புரதம், கால்சியம் சத்துகள் இதில் உள்ளன.

பனங்கிழங்கு:
சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த இந்த கிழங்கில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் சில உயிர்சத்துகளும் உள்ளன. இது மலச்சிக்கலைப்போக்கும், பசியை அதிகரிக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4