விழி திறந்து தேட....மறந்திட மறையும் உருவமா நீ. அன்பே புரிந்திடு நீ தான் நானென. இன்றைய கவிதை 02-03-2023.
#கவிதை
#தேடல்
#இன்று
#தகவல்
#லங்கா4
#Poems
#search
#today
#information
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago

விழி திறந்து தேட
===================
மறந்திட மறையும்
உருவமா நீ.
அன்பே புரிந்திடு
நீ தான் நானென.
உடல் சோர்ந்து
நீ விழ்ந்தால்
என் உள்ளம்
துடிதுடித்து போகும்.
அறிந்திட உனக்கு
வாய்ப்பு இல்லை.
பிரிந்திட்டதால் அது
சாத்தியமே காணாயோ?
உன் நிழல் போல
உனை தொடரும் எனை
மனதால் மணந்து
எனக்காய் வாழாயோ?
என் விருப்பு போல்
என்றும் புன்னகை.
துயரின்றி மகிழ்ந்து
மனதால் வாழ்ந்திடு.
உனை தினம் காண
விழி திறந்து
தேடிய போதும்
காணக் கிடைக்காதே!
........ அன்புடன் நதுநசி



