காற்று வழி ஒரு செய்தி சொல்வேன். இதழோரம் ஒரு உலா வந்தேன். முத்தம் தந்து அணைத்த போது. இன்றைய கவிதை 04-03-2023.

#கவிதை #காதல் #இன்று #தகவல் #லங்கா4 #Poems #Love #today #information #Lanka4
காற்று வழி ஒரு செய்தி சொல்வேன். இதழோரம் ஒரு உலா வந்தேன். முத்தம் தந்து அணைத்த போது. இன்றைய கவிதை 04-03-2023.

காற்று வழி ஒரு
செய்தி சொல்வேன்
********************************

இதழோரம் ஒரு
உலா வந்தேன்.
முத்தம் தந்து
அணைத்த போது.

அந்த ஈரம்
தந்த இன்பத்தில்
மிதந்து போக
என் சொர்க்கம் நீ.

கனவு கூட
உன் வரவுக்காக
நித்தம் வந்து போக
நீ ஏனோ வரவில்லை.

ஏக்கம் வந்து
ஏமாற்றி போகிறது.
தென்றல் காற்றும்
சோகம் சுமக்கிறது.

நெஞ்சில் கூடிய
குருதியும் சிவந்து
உன் நினைவு தேடி
உடல் நீளம் ஓடுகிறது.

மெல்ல வந்து
இதழ் வைத்து ஒரு
முத்தம் தந்தால்
உயிர் மீளும் அன்பே.

சத்தம் இல்லா
உன் முத்தம்
இதயம் தன் சந்தம்
மாறாது இருக்கும்.

காற்று வழி ஒரு
செய்தி சொல்வேன்.
கற்று வந்து எனை
தாங்கிடு அன்பே!

                                                                                                            ........ அன்புடன் நதுநசி.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4