இரக்கம் தேடியும் இரங்காது இந்த உலகு. இசைந்து வாழ்ந்திட இனியொரு வாய்ப்பு இருக்குமா அன்பே! இனித்திடச் சொல். இன்றைய கவிதை 06-03-2023

இரக்கம் தேடியும்
இரங்காது இந்த உலகு.
========================
இசைந்து வாழ்ந்திட
இனியொரு வாய்ப்பு
இருக்குமா அன்பே!
இனித்திடச் சொல்.
இரக்கம் இல்லா
இந்த உலகில்
இரங்கிடக் கேட்டு
இரந்தேன் பார்.
தாங்கிட உள்ளம்
தா எனக் கேட்டு
தானமாய் வாங்கி
தாங்கி நான் சாயவோ?
வெந்த பின்னும் இங்கே
வெல்லும் எண்ணம்
வெள்ளிக் கிண்ணத்து
வெண் நெய் ஆக்குமே!
மனதில் காயம் பட்டு
மாண்பு கெட்டால்
மண்ணில் என்ன
மானம் இருக்குமோ?
செய் நன்றி ஏனோ
செய்யாது போனது.
செத்துப் போகும் எனை
செத்தல் ஆக்கியது.
அன்புக்கு ஏங்கிடும்
ஆசை இருக்கும்.
ஆனபோதும் இங்கே
ஆவேசம் தூண்டிடும்.
தன்மானம் இழந்து
தலை நிமிர்ந்து வாழல்
தன்மை இழந்து போன
தலைமை போலாகாதோ?
விருப்பும் வாழ்வு
விலகி போகிறது.
வினை வழி துணை
விரும்பாது ஒதுக்கிறது.
பிழை தேடி நான்
பிழை செய்து நின்றால்
பிழையில்லை என்று
பின்னே சொல்வார்.
நல்லவர் நாலு பேர்
நல்ல பெயர் எடுக்கார்.
நல்லதை செய்யாதோர்
நடுவில் நின்று போல்.
இன்று போல் என்றும்
இனியும் இருக்காது.
இன்பம் தேடி ஓடியும்
இசைவார் இல்லையே!
........ அன்புடன் நதுநசி



