விமானத்தில் சக பயணி மீது மதுபோதையில் சிறுநீர் கழித்த விவகாரம்

#Flight
Mani
3 years ago
விமானத்தில் சக பயணி மீது மதுபோதையில் சிறுநீர் கழித்த விவகாரம்

நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் சக பயணி மீது மதுபோதையில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் இந்திய மாணவருக்கு தங்கள் விமானங்களில் பயணம் செய்ய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தடை விதித்தது.

இதுகுறித்து அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆர்யா வோஹ்ரா என்ற இந்திய மாணவர் அதிக போதையில் இருந்ததாகவும், விமானப் பணியாளர்களின் அறிவுரைகளை கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து விமானப் பணியாளர்கள் மற்றும் விமானத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தினார் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இதேபோல் இந்திய மாணவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல்துறையும் கூறியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4