தொலைதூர தொடரூந்துகள் முதல் தடவையாக இரத்துச் செய்யப்படும் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளது - கே.ஏ.யு.கொந்தசிங்க

#Train #MetroTrain #Railway #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
தொலைதூர தொடரூந்துகள் முதல் தடவையாக இரத்துச் செய்யப்படும் செயற்பாடுகள்  இடம்பெற்றுள்ளது - கே.ஏ.யு.கொந்தசிங்க

தொலைதூரப் பகுதிகளுக்கான பிரதான தொடரூந்து சேவைகள் வரலாற்றில் முதல் தடவையாக இரத்துச் செய்யப்படும் செயற்பாடுகள் தற்போது இடம்பெற்றுள்ளதாக லோகோமோட்டிவ் இன்ஜினியரிங் நடத்துநர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.யு.கொந்தசிங்க தெரிவித்துள்ளார்.

கிழக்கு வலயத்திற்குட்பட்ட மாஹோ, கல் ஓயா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதான தொடரூந்துகள் ஆளணிப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

தொடரூந்து திணைக்களத்தில் அத்தியாவசியமான ஒவ்வொரு தரமும் ஊழியர்கள் வெற்றிடங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. 
தொடரூந்து சேவைகளில் மூன்றாம் தரத்தில் உள்ள 90க்கும் மேற்பட்ட இயந்திர ஓட்டுனர்கள் இன்னும் இரண்டு இடங்களுக்கு உயர்த்தப்படவில்லை. 

இதனால், அவர்களால் தொடரூந்து இயந்திரங்களை இயக்க முடியவில்லை என்று கொந்தசிங்க கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஒப்பந்த அடிப்படையில் ரயில்வேயில் இணைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் முறையான சேர்க்கை நடைபெறும் வரை உறுதிப்படுத்தல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே தொடரூந்து வரலாற்றில் முதல் தடவையாக கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் இயக்கப்படும்  தொடரூந்தை இரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4