கோண்டாவிலில் 5 லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது!

#Arrest #Tamil #Tamil People #sri lanka tamil news #Tamilnews #Lanka4
Prabha Praneetha
3 years ago
கோண்டாவிலில் 5 லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பினை வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு 5 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கோப்பாய் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலும் , கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4