மரணம் தேடி ஓட மரநிழல் போக சொன்னது. கனவில் வந்து நீ கன நேரம் பேசு. - என் கண்ணில் வழியும் கண்ணீரும் மறையும். இன்றைய கவிதை 07-03-2023.

மரணம் தேடி ஓட
மரநிழல் போக சொன்னது.
********************************************
கனவில் வந்து நீ
கன நேரம் பேசு. - என்
கண்ணில் வழியும்
கண்ணீரும் மறையும்.
வார்த்தை தந்த ஆறல்
வாழச் சொல்லி போகிறது.
வாழை போல பெருகி
வாழும் ஆசை இருக்கிறது.
நேற்று இருந்தது
நேரம் போல கடக்கிறது.
நேத்தி வைத்து மாற்ற
நேர்மை மனிதர் முயற்சி.
கானல் நீர் போல
காணாத விழி நீர்.
காற்றில் கலக்கும்
காதல் கதையாக.
உன்னை சேர்ந்து
உன்னோடு வாழும்
உறவு ஒன்று போதும்
உயிரோடு உறவாக வாழ.
மனையில் இருந்து நான்
மரணம் தேடி ஓட
மணல் பாதை அது
மரநிழல் போ என்றது.
அன்பால் கூடி வாழும்
அந்த நொடியில் பார்
அம்பை ஏற்றி காணும்
அரவம் ஒன்றால் மகிழ்வோ?
துழைவழி ஒரு சுகம்
துக்கம் வழி இன்பம்
துயரம் தருதல் பாவம்
துணிந்து வாழ நீ வா.
கண்ணில் வழியும்
கரு நீரும் நான்
துடைத்து உனை
துயரின்றி காப்பேன்.
ஏனோ எனை தாங்க
ஏணி போல நீ வா.
ஏற்றம் ஒன்றில் நான்
ஏறிட நீ வேண்டுமே!
ஈரம் கொண்ட உன்
ஈதல் மனதோடு
ஈகோ இல்லாத வாழ்வு
ஈற்றில் நலம் வாழலாம்.
......... அன்புடன் நதுநசி.



