ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 300-வது விக்கெட்டைக் கைப்பற்றினார் ஷாகிப் அல் ஹசன்

#sports #Sports News #world_news #Cricket
Mani
1 year ago
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 300-வது விக்கெட்டைக் கைப்பற்றினார் ஷாகிப் அல் ஹசன்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்களை எடுத்த முதல் பங்களாதேஷ் வீரர் என்ற சாதனையை சகிப் அல் ஹசன் பதிவு செய்துள்ளார். 

இங்கிலாந்து - பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தினார். இலங்கையின் சஞ்சய் ஜெயசூர்யா, நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோருக்கு அடுத்து 300 விக்கெட்கள் எடுத்த வீரர் என்று சாதனை படைத்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்களை  14-வது வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரீஹன் அகமத் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 300-வது விக்கெட்டை எடுத்தார்.ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்கள் எடுத்த மூன்றாவது என்ற சாதனையையும் பதிவு செய்துள்ளார்.2006 ஆம் ஆண்டு ஜிம்பாவே வீரர் எல்டான் சிகும்புராவின் விக்கெட் எடுத்ததன் மூலம் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார். 2010 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியில் தனது 100-வது விக்கெட்டை எடுத்தார். ஷாகிப் டெஸ்ட் போட்டிகளில் 231 விக்கெட்கள் மற்றும் டி-20 போட்டிகளில் 128 விக்கெட்களை எடுத்துள்ளார். பங்களாதேஷ் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் 227 போட்டிகளில் 6976 ரன் எடுத்து 37.70 சராசரி வைத்திருக்கிறார். 9 சதம் மற்றூம் 52 அரைசதம் வைத்திருக்கிறார்.  ஆஸ்திரேலியாவின் ஸ்டார் பவுலர் மிட்சல் ஸ்டார்க் 211 விக்கெட்கள் எடுத்து சகிப் அல் ஹசனுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். 
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!