உடல் சூட்டை தணிக்கும் எண்ணெய்கள்!

#Health #Healthy #Tamilnews
Mani
3 years ago
உடல் சூட்டை தணிக்கும் எண்ணெய்கள்!

நல்லெண்ணெய் :
வாரம் ஒருமுறை தலைக்கு நல்லெண்ணெய்யை தேய்த்துக் குளித்துவர,  உடல் உஷ்ணம் குறைந்து, உடல் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும்  இருக்கும்.

விளக்கெண்ணெய்:
இரவு தூங்கும் முன் உள்ளங்காலில் விளக்கெண்ணெய் தேய்த்துவிட்டு தூங்கினால் உடல் சூட்டைத் தணிக்கலாம்  அல்லது  வாரத்தில்  இருமுறை இரவு உறங்குவதற்கு முன் தொப்புளில் இரு துளிகள் விளக்கெண்ணெய் வைத்துவிட்டு உறங்கலாம். இவ்வாறு செய்வதினால்  உடல் சூடு நன்கு குறையும்.

தேங்காய் எண்ணெய்:
வெயிலில்  அதிகம்  அலையும்  வேலையில் இருப்பவர்களும்,  ஒரே இடத்தில்  அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும்  அடிக்கடி உடல்  உஷ்ணம்  ஏற்பட வாய்ப்புண்டு.  அதனால்,  இவர்கள் தினசரி  தலையில் தேங்காய் எண்ணெய் தடவுவதைக் கட்டாயமாகப் பின்பற்றினால் உடல் உஷ்ணத்தைக் குறைக்கலாம்.  

சந்தன எண்ணெய்:
வாரத்தில் ஒருமுறை சந்தன எண்ணெய்யை உடலில் தடவி ஊறவைத்துக் குளித்துவர உடல் சூடு தணியும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4