வழிகாட்டும் உறவு அது போதும் வாழ. ஔடதம் போல ஒரு  சொல் சொல்லும் மனிதர் வேண்டும் நல் வாழ்வு நாம் பெற. இன்றைய கவிதை 11-03-2023

#கவிதை #வழி #இன்று #தகவல் #லங்கா4 #Poems #today #information #Lanka4 #Tamil
வழிகாட்டும் உறவு அது போதும் வாழ. ஔடதம் போல ஒரு  சொல் சொல்லும் மனிதர் வேண்டும் நல் வாழ்வு நாம் பெற. இன்றைய கவிதை 11-03-2023

வழிகாட்டும் உறவு
அது போதும் வாழ.
=====================

ஔடதம் போல ஒரு 
சொல் சொல்லும்
மனிதர் வேண்டும்
நல் வாழ்வு நாம் பெற.

ஔடதப் பேச்சில்
ஒரு மூச்சு இருக்கும்.
வாழ்வை வெல்லும்
வழிகள் தேடும் வகை.

ஔவை சொன்னது
நினைவில் வரும்.
அவரைப் போல் இவரை
போற்ற மனம் ஏகும்.

ஔவையம் ஒர் நாள்
நமக்காக மாறும்.
நலம் நாம் வாழும்
நிலையும் நாளை வரும்.

ஏற்றம் ஒன்றை மட்டும்
நோக்கி நடந்தால்
இறக்கம் எல்லாம்
ஏற்றத்தின் பாதையே!

தாக்கம் இருக்கும்
மனதில் தான் ஒரு
ஏக்கம் இருக்கும்
மருந்தொன்று கேட்டு.

பாசம் காட்டி பழக
உறவில்லா மனிதர்
புரிந்து இருப்பார்
மருந்தாகும் சொல்.

மரம் இருக்கும்.
நிழலின் பயன்
தெரிந்தது இல்லை.
மரம் படும் போது?

வழி காட்டும் 
உறவு இருந்தால்
வழி மாறும் நிலை
வாழ்வில் இருக்காது.

                                                                                                    ........ அன்புடன் நதுநசி.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!