16 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது

#Boat #India #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
16 தமிழக மீனவர்கள்  கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் ஊடுருவிய இரு இந்திய விசைப் படகுகளில் பயணித்த 16 தமிழக மீனவர்கள்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் புதுக்கோட்டை மற்றும் நாகைபட்டினத்தைச் சேர்ந்த இரு படகுகளில் எல்லை தாண்டிய மீனவர்களே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த  81ஆம் இலக்க படகு அனலைதீவு கடற்பரப்பில் நான்கு மீனவர்களுடன் எல்லை தாண்டிய சமயமும்,

நாகைபட்டினம் 7818ஆம் இலக்கப் படகு 12 மீனவர்களுடன் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் எல்லை தாண்டிய சமயமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுகின்றனர்.

மயிலிட்டித்துறைமுகம் கொண்டு வரப்படும் தமிழக மீனவர்களில் 12 மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றிலும் 4 மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றிலும் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4