கண்டேன் கனவொன்றில் காரிகையின் பேரெழிலை - இன்றைய கவிதை 12-03-2023
#கவிதை
#இன்று
#தகவல்
#Poems
#today
#Lanka4
#லங்கா4
Prasu
2 years ago

கண்டேன் கனவொன்றில்
காரிகையின் பேரெழிலை
உண்டேன் உவகையுற
உள்ளூறும் பெரும்சுவையை
கொண்டேன் என்னங்கமெல்லாம்
கொண்டிருந்த காதலிலே
கலைந்ததே என்கனவு பாழ்!
நின்றும் கிடந்துமவளில்
நீண்டிருந்த என்காதல்
தின்று என்னிளமைதனை
தீர்த்துவிட நானங்கு
மன்று வராமலேயந்த
மங்கை தலைகுனிய
மீள வாராதோவக் கனவு!
மெல்ல தலைசாய்த்து
மெல்லியளால் மடிதனிலே
செல்லக் கண்தூக்கம்
சென்றுவிட நானங்கு
மெல்லத் தலைகோதி
மெல்லிசையை அவள்படிக்க
கலைந்த கனவேமீள வா!
அள்ளக் குறையாத
அமுதூறும் காதலினை
வெள்ளம் போலென்மீது
வேகமென அவள்பொழிய
கள்ளப் பார்வையதாலவள்
கன்னம் கடித்துவிட
அலைந்த கனவேயுரு வெடு!
இராம இராகவன்



