அதிவேகத்தில் அதிகரிக்கும் ஆபரண தங்க விலை!

#SriLanka #sri lanka tamil news #Gold #Tamil #Tamil People #prices #Colombo
Prabha Praneetha
3 years ago
அதிவேகத்தில் அதிகரிக்கும்  ஆபரண தங்க விலை!


இலங்கையில் தங்கப்பவுணொன்றின் விலையானது ஒரே வாரத்தில் சுமார் 39,000 ரூபாவினால் குறைந்திருந்த நிலையில் தற்போது வீழ்ச்சியடைந்த வேகத்தில் உயர்ந்து வருகிறது. 

அதன்படி கடந்த 9ஆம் திகதியை விட, பத்தாம் திகதி 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 10,000 ரூபாவால் அதிகரித்திருந்ததாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் இராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்திருந்தார்.

குறித்த தினத்தில் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 165,000 ரூபாவாக பதிவாகியிருந்ததுடன், 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 152,700 ரூபாவாக பதிவாகியிருந்தது. 

இவ்வாறான நிலையில் கொழும்பு செட்டியார்தெருவில் இன்றைய தினம் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 173,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 160,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4