வெளிநாட்டு வேலைவாய்ப்பு குடும்பங்களுக்காக கிளிநொச்சியில் செயலமர்வு!
வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் க. நிகரில்காந்த் அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இச்செயலமர்வில், வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் நலன்களைப் பாதுகாத்தல், அவர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தல் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகளை குறைத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
பச்சிலைப்பள்ளி மற்றும் கரைச்சி பிரதேச செயலகங்களைச் சேர்ந்த உதவி பிரதேச செயலாளர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுதொழில் முயற்சி உத்தியோகத்தர்கள், தொழில்துறை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விதாதா உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் இச்செயலமர்வில் கலந்துகொண்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே