நாளை மாறட்டும் நம் நல் வாழ்வு மங்கை வழி. நிலை மாறி நாம் பழமை திரும்புவோம். நட்டு வளர்த்த நம் செடியில் காய் பறிப்போம். இன்றைய கவிதை 13-03-2023.

#கவிதை #பெண் #வழி #இன்று #லங்கா4 #Poems #Girl #today #information #Lanka4
Nila
1 year ago
நாளை மாறட்டும் நம் நல் வாழ்வு மங்கை வழி. நிலை மாறி நாம் பழமை திரும்புவோம். நட்டு வளர்த்த நம் செடியில் காய் பறிப்போம். இன்றைய கவிதை 13-03-2023.

நாளை மாறட்டும் நம்
நல் வாழ்வு மங்கை வழி.

**************************************

நிலை மாறி நாம்
பழமை திரும்புவோம்.
நட்டு வளர்த்த நம்
செடியில் காய் பறிப்போம்.

கடைச்சரக்கில் இல்லை
உடல் ஆரோக்கியம்.
அறிந்து ஆய்ந்து நாம்
நம் வாழ்வை திருப்புவோம்.

விற்றார் இலாபம் 
அவரடைய நாம் ஏன்
நன்மை இழந்து இறப்பான்
கேட்டு விளிப்போம் இனி.

புத்தியுள்ள பிள்ளைகள்
பொறுப்போடு வளர்த்து
நாளை ஆக்குவோம்
நாட்டில் நல்ல சமூகம்.

வீட்டில் ஒளியேற்றும்
நல்ல மங்கையை
மண்ணுக்காக வளர்ப்போம்.
மண் செழித்து வாழ்ந்திட.

பெண் வழி நல்ல
சிந்தனை விதைத்தால்
நல்ல பயிர் போல அஃது
விளைவு நலம் என ஆகுமே!

குடும்பம் உறவு வழி வாழ
குத்து விளக்காக இந்த
பெண்கள் ஒளிர வேண்டும்.
நாளை தானும் நலம் ஆகிட.

அவள் போடும் ஆடை
கவர்ச்சி என்று சொல்லும்
நிலை மாறிப்போகின்
எண்ணங்கள் நலம் ஆகிடும்.

பசிக்கு உண்டு வாழும்
நிலை அறிந்து உண்டோம்.
உடன் கட்டை ஏறும் 
முறை தவறென உணர்வோம்.

உடல் பசிக்கு அவள்
இரை எனக் கொள்ளும்
முறை தவிர்த்து வாழ்வோம்.
புது வழி தனை காண்போம்.

குடும்பப் பொறுப்பின் 
வழிகாட்டி அவளென
ஒரு புது வழி செய்வோம்.
குல விளக்கென கொள்வோம்.

பால் வழி ஒரு பழி
அவள் வழி குலம்
கருகிடாது வாழ வழி
சொல்லி வைப்போம்.

இறையென அவளை தான்
வாழ வைத்து விட்டால்
கொடையென வரம்
தந்துதான் போகாளோ?

ஆசைகள் அதிகம் 
அடக்கி வாழும் நல்
குணம் வளர்த்து அவளை
வாழ வைப்போம்.

தவித்த வாய்க்கு நாம்
தண்ணீர் கொடுத்தால்
இளவயதில் அவள்
நல்ல களம் காண்பாள்.

பெண்ணின் ஆற்றல்
காமம் வழி மட்டுமல்ல.
காடும் நாடும் ஆளும்
நெறி வழி என்போம்.

பொது வழி தாய் வழி 
நாளை மாறட்டும் நம்
வாழ்வு மங்கை வழி.
பொறுப்போடு நடந்தால்.

                                                                                                      ........ அன்புடன் நதுநசி.