தேசிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல்

#Protest #AnuraKumaraDissanayake #strike #Court Order #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
 தேசிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல்

மார்ச் 09 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க ஆகியோரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

பிரதிவாதிகளாக நிதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர், அரசாங்க ஊடகப் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட 35 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4