நாளை நலம் மாற வார்த்தை மாற்றிச்சொல். என்ன அருமை பார் அந்த பெண் காதல் நின்று வாழும் போது...இன்றைய கவிதை 15-03-2023.

நாளை நலம் மாற
வார்த்தை மாற்றிச்சொல்.
+++++++++++++++++++++++++++
என்ன அருமை பார்
அந்த பெண் காதல்
நின்று வாழும் போது
நாளை விடியாதே பார்.
வென்று வந்து வீடு
மடுவும் மலையும் போல
ஏற்றி இறக்கி பாரும்
மனதும் போகும் கொள்ளை.
பெண்டீர் மீதொரு பற்று
விற்றுப் போகும் வாழ்வை.
வீணே கொண்டு நாமே
சாகும் நிலையும் வரும்.
சங்கத்து தமிழிலும்
கங்கைக்கு வாழ்த்து
மங்கை வாழும் வரம்
என்றொரு போற்றலும்.
சிதைந்த வாழ்வுக்கு
சிந்தை தந்தது இந்த
மங்கை என்றுணர்ந்து
மாற்றம் கொண்டு ஓதும்.
ஏதும் இல்லை என
கைவிரித்து போகும்
நங்கைக்கும் தங்கை
உணர்வு வேண்டும்.
கவிவழி இனியும் பார்
மாதர் தமை புகழ்தல்
மட்டும் மாடேகி வாழும்
விதி செய்யாது கேளும்.
அஃது சொல்லும் இடை
அவளின் கெட்ட நிலை.
இச்சை வழி கசிந்து
அழுகும் வாழ்வை தடுக்க.
அழகும் ஆற்றலும்
அவளிடம் உண்டு தான்
பார்த்தும் சுவைத்தும்
வாழலுக்கும் வாய்ப்பே!
இருந்தும் இரந்து வாழும்
மற்றொரு பெண் வாழ்வு
கெடும் வகை அவள்
இனிப்பூட்டி போதல் தவறு.
கடினம் வழி கனவு
பூப்போல மலராதோ?
மாற்றம் வேண்டும் இனி
மலர்ந்து தான் ஆகி.
எண்ணம் மாற்றி தான்
வார்த்தை கோர்த்து சொல்.
நிலை மாறி நாளை
நலம் ஆகும் மனை வாழ்வு.
......... அன்புடன் நதுநசி.



