வளைவும் நெளிவும் தேனமுதம் தந்ததே! தாரா போல ஒரு நடை கண்டேன் உன்னில். இடையின் கீழே பின்னே அசைவும் அழகென்றேன். இன்றைய கவிதை 16-03-2023.
#கவிதை
#காதல்
#இன்று
#தகவல்
#லங்கா4
#Poems
#Love
#today
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago

வளைவும் நெளிவும்
தேனமுதம் தந்ததே!
=======================
தாரா போல ஒரு
நடை கண்டேன் உன்னில்.
இடையின் கீழே பின்னே
அசைவும் அழகென்றேன்.
கூந்தல் அசைவில்
முதுகில் ஒரு ஊஞ்சல்
கட்டி ஆடலாமென்று
ஆசையும் குறும்பானதே!
எறும் பூரும் சேலையில்
சோலை சுற்றி யொரு
ஆடை போட்டு வந்தவளே
என்னுயிர் பூங்குயிலே!
குளத்திடை மீனாக நீ
நீந்திடும் உன் அழகில்
ஆற்றிடைத் தேராக இப்போ
ஆடுதே என் மனது உன்னால்.
தேடுதே உன் மறைந்த
பேரழகை எல்லாம் .
மூடிய ஆடையும் அந்த
ஆசையை தூண்டுதே!
மல்லிகை பூங்கொத்து
ஏந்திய கையெதோ?
பூவும் நிறம் மாறியே
உன்னோடு கலந்ததோ?
நிலவும் நாணி இரவு
ஓடி மறைந்ததோ சொல்.
தேடிய தேகம் எல்லாம்
மலை வெளி தேசமோ?
படைப்பில் இத்தனை
வளைவும் நெளிவும்
அழகோடு பிணைந்து
தேனமுதம் தந்தே உன்னால்.
......... அன்புடன் நதுநசி.



