பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

#world_news #Pakistan #Police #Arrest
Mani
3 years ago
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இது தொடர்பான வழக்கில் அவர் ஆஜராகாததால், இஸ்லாமாபாத் நீதிமன்றம் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. ஆனால், இந்த வழக்கில் அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில் நேற்று இம்ரான் கானை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டதால், அவரது வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். இதையறிந்த அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையால் அவரது ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஏராளமான போலீசார் காயமடைந்தனர்.

இம்ரான் கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, அவரை கைது செய்வதற்கான தடையை தற்காலிகமாக நீட்டித்து லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4