லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட தியான மண்டபம்!
லண்டன் ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் புதிதாக திருமண மண்டபம்!
இலண்டன் ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் புதிதாக திருமண மண்டபம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
பங்குனி மாதம் 19 ஆம் திகதி 2023 அன்று மதியம் 12.00 மணிக்கு ஈலிங் மேயரால் குறித்த திருமண மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் ஈலிங் மொஹிந்தர் மிதாவின் மேயர, ரெட்பிரிட்ஜ் மேயர் தவரஞ்சன் ஜெயரஞ்சன், இந்திய உயர் ஸ்தானிகராலயத்திலிருந்து டாக்டர் லில்லி குணசேகர், ஈலிங் துணை மேயர் ஹிதேஷ் டெய்லர், பார்னெட்டின் துணை மேயர் நாகஸ் நரேந்திரா, ஹாரோவின் முன்னாள் மேயர் சுரேஷ் கிருஷ்ணா, பிரெண்ட் முன்னாள் மேயர் கன நஹீரதன், ஹாரோவின் முன்னாள் துணை மேயர் சசிகலா சுரேஷ், கவுன்சிலர் தாரிக் மகமூத், கவுன்சிலர் பரம் நந்தா., கவுன்சிலர் ராஜன் சீலன், கவுன்சிலர் குமார் சகாதேவன், கவுன்சிலர் கமலா குஹான், கவுன்சிலர் தாயா இடைக்காடர், கவுன்சிலர் ஜெய் கணேஷ் கவுன்சிலர் ஆலன் ஜோசப் ஆகியோரும்
டாக்டர் பரமநாதன் - அறங்காவலர் செயலாளர். திரு கிருஷ்ணராஜா - முன்னாள் செயற்குழு தலைவர், டாக்டர் மயூரன், முன்னாள் இளைஞர் மன்றத் தலைவர் திரு ஜோகநாதன், செயல் தலைவர் திரு ஸ்ரீ ரங்கன், அறங்காவலர் திரு ரகுநாதன் - செயற்குழு செயலாளர் கருணைலிங்கம் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இனிவரும் காலங்களில் மக்கள் ஆலயத்தின் திருமண மண்டபத்தில் தமது திருமணங்களினை இலகுவாக நடாத்தலாம் எனவும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளனர்
இதேவேளை ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினூடாக தாயகத்தில் வாழும் மக்களுக்கு பல வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.