கருச்சிதை ஏற்பட்டதால் வீசப்பட்டிருக்கலாம் விசாரணைகள் இடம்பெறுகிறது பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

#Hospital #Jaffna #baby #Death #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
கருச்சிதை ஏற்பட்டதால் வீசப்பட்டிருக்கலாம்  விசாரணைகள் இடம்பெறுகிறது பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

யாழ். போதனா வைத்தியசாலையில் வீசப்பட்டிருந்த  கரு, பெண்ணுக்கு ஏற்பட்ட கருச்சிதைவு காரணமாக வீசப்பட்டிருக்கலாம் என  யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இன்றையதினம் புதன்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் 22 ஆம் இலக்க விடுதிக்கு அருகாமையில்  வீசப்பட்டிருந்த பெண்ணின் கரு தொடர்பில்  ஊடகங்கள் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த   ஒரு பெண் கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் அதனை போதனா வைத்தியசாலையின் பாவனையற்ற மலசல கூடத்தொகுதியில் வீசி இருக்கலாம் என நம்புகிறோம்.

இந்நிலையில் மீட்கப்பட்ட கரு சட்ட  வைத்திய  அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசாரிடமும் குறித்த விடையம் தொடர்பில் தெரிவித்துள்ளோம் விசாரணைகள் இடம் பெறுகிறது என  அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4