உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட தீர்மானம்

#Election #Election Commission #Nimal Punjihewa #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு  விசேட தீர்மானம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (23) விசேட தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

இதன்படி இன்று (23) காலை 10 மணிக்கு அனைத்து அரசியல் கட்சி செயலாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாத விவகாரங்கள் குறித்து நீண்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற உள்ளது.

தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிப்பதா அல்லது புதிய தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு கூடுதல் அவகாசம் வழங்குவதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்று (23) முடிவு எடுக்க உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4