இலங்கைப் பெண்களுக்காக நிதி உதவி வழங்கும் ஜப்பான்!

#SriLanka #Sri Lanka President #Japan #Women #Finance #money #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
இலங்கைப் பெண்களுக்காக நிதி உதவி வழங்கும் ஜப்பான்!

நெருக்கடிக்குள்ளான பெண்களை வலுவூட்டுவோம்’ என்ற செயற்றிட்டத்தின் இலங்கைப் பெண்களுக்கு  மனிதாபிமான உதவிகளை வழங்க 1.06 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஜப்பான் வழங்கியுள்ளது.

 சமூக பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

‘நெருக்கடிக்குள்ளான பெண்களை வலுவூட்டுவோம்’ என்ற செயற்றிட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகளின் பெண்கள் பிரிவினூடாக ஜப்பான் அரசு இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.

இந்த நிதி மூலம் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு உள்ளான 1200-க்கும் அதிகமான பெண்களுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் உதவிகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், நுண் தொழில்முயற்சியில் ஈடுபட்டு, வீழ்ச்சியை சந்தித்துள்ள 500 பெண்களுக்கும், வறுமை மற்றும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள 2000-ற்கும் அதிகமானோருக்கும் உதவிகள் வழங்கப்படவுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4