இயற்கை வழி இச்சை. நாணலும் சாயுதே காற்றின் திசையில். ஆறும் பாயுதே புவியின் சாய்வில்.-நதுநசி. இன்றைய கவிதை 24-03-2023.
#கவிதை
#காதல்
#தேடல்
#இன்று
#லங்கா4
#Poems
#Love
#search
#today
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago

இயற்கை வழி இச்சை
=======================
நாணலும் சாயுதே
காற்றின் திசையில்.
ஆறும் பாயுதே
புவியின் சாய்வில்.
நேற்றும் பிறை
வானில் தோன்றவே!
உன் நெற்றி போல
காட்சி எனக்கும் ஆனதே!
புத்து குலுங்கும்
பூக்களும் கேட்காதோ?
சூடும் மங்கை அவள்
எங்கே போனாளோ?
விழி திறந்து நாளும்
வழி காத்துக் கிடந்தே
முழி பிதுங்கி போகவே
நானும் கண் அயர்வேனே!
காத்து கிடந்தும்
காலங்கள் கடக்கிறதே!
கனங்கள் எல்லாம்
கற்பம் ஆகி போகிறதே!
இயற்கை வழி
இச்சை நாடி போகிறதே!
இடை வந்து பறித்து
இரக்கமற்று வாழ்வாரோ?
........ அன்புடன் நதுநசி.



