இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் உடலுக்கு உண்டாகும் கேடுகள் இவை.

#ஆரோக்கியம் #உடல் #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Body #Antoni #Theva #Antoni Thevaraj
இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் உடலுக்கு உண்டாகும் கேடுகள் இவை.

இன்றைய ஆரோக்கிய பதிவில் ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தக்கூடிய ஒரு ஆரோக்கியச் செய்தியையே தெரிவிக்கவிருக்கின்றோம். அதுவென்னவென்றால் உள்ளாடைகள் ஆண், பெண் இருபாலரும் அணிவது வழக்கம். அதில் அந்த உள்ளாடைகள் இறுக்கமாக அமைந்திருப்பின் ஏற்படும் தீமைகளையே பாரக்கவிருக்கின்றோம்.

இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைபாடு ஏற்படும்.  உள்ளாடைகளை இறுக்கமாக அணிவதால் அதிலிருந்து வெளிவரும் சூடு விந்தணு எண்ணிக்கையை குறைகிறது. இது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இறுக்கமான ஆடை அணிவதால் இரத்த ஓட்டம் தடை படுகிறது. அது எப்படி என்று யோசிப்பீர்கள். எந்த இடத்தில் இறுக்கமான ஆடை அணிகிறீர்களோ அந்த இரத்தில் செயல்படும் நரம்புகள் உணர்ச்சி இழந்து போகும். அதேபோல் அந்த இடத்தில் இரத்தம் செயல்படாது என்றும் இதனால் இரத்தம் ஓட்டம் தடைபடுகிறது. அந்த இடத்தில் இருக்கும் இழையங்கள் இறந்துபோகும்.

நம் உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு  என்றால் அது பிறப்பு உறுப்பு தான். அந்த இடத்தில் இறுக்கமான ஆடைகள் அணிவதால் எரிச்சல், அலர்ஜி போன்ற தொற்றுகள் ஏற்பட முக்கிய காரணம் இறுக்கமான உள்ளாடைகள் தான். அதேபோல் உடல் நலம் பாதிப்புகளும் ஏற்படும்.

ஆண்கள் சில இடங்களில் வேலைபார்க்கும் போதும் அந்த இடத்திற்கு என்று சில விதிமுறைகளை கடைபிடிப்பார்கள் ஆனால் அவர்கள் தொடை வரை டக்கிங் செய்துகொள்வார்கள். அப்படி செய்வதால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் அமில எதிர்வினை வயிற்று பகுதியில் எரிச்சலை ஏற்படுத்துகின்றதாக அறியப்பட்டுள்ளது.

உடலுறுப்பு பகுதியில் காற்று செல்ல வேண்டும் இல்லையென்றால் அந்த இடத்தில் வியர்வை ஏற்பட்டு அவ்விடத்தில் பாக்டீரியா தங்கி தொற்றுக்களை ஏற்படுத்தி உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.

குறிப்பிட்ட உள்ளாடைகளில் அணியும் போது அதில் இருக்கும் இரசாயனம் உடலில் சர்ம நோயை ஏற்படுத்தும். அது சிவந்த தடிப்பு போன்ற கட்டிகள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

இறுதியில் நவ நாகரீகத்திற்காக உள்ளாடைகளை இறுக்கமாக அணிந்து உடல் உபாதைகளை கொண்டுவந்து ஈற்றில் கவலைப்படுவதிலும். நமது அளவிற்கு அடுத்த அளவிலான உள்ளாடைகளை அணிந்து காற்றோட்டமானதாக இருக்கும் வண்ணம் செய்து உடலுறுப்பை பாதுகாப்போம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4