சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் பயங்கர விபத்து: பொலிஸ் பரிசோதகரின் மகன்பலி

#Accident #Police #Death #SriLanka #sri lanka tamil news #Lanka4
Prathees
3 years ago
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் பயங்கர விபத்து:  பொலிஸ் பரிசோதகரின் மகன்பலி

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் மாரவில நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் ஒரு குடியிருப்பில் வசிக்கும் இளைஞன் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் ஆலோசகராகப் பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மகனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டிப்பர் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மாரவில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4