சர்வதேச கவிஞரும் முன்னாள் ஆசிரியருமான இளையதம்பி சங்கரப்பிள்ளை கனடாவில் இயற்கை எய்தினார்!

#Death #Canada #Poems #Lanka4
Kanimoli
1 year ago
சர்வதேச கவிஞரும் முன்னாள் ஆசிரியருமான இளையதம்பி சங்கரப்பிள்ளை கனடாவில் இயற்கை எய்தினார்!

அமரர். இளையதம்பி  சங்கரப்பிள்ளை அவர்கள்  யாழ் தோப்புரை பிறப்பிடாகவும், கந்தர்மடத்தை வாழ்விடமாகவும் கொண்டவர் யாழ் இந்து கல்லூரி மற்றும் நைஜிறியாஆகியவற்றில் ஆசிரியராகக் கடமையாறிய அவர் பின்னர் இறுதி வரை கனடா ஸ்காபரோவை வதிவிடமாகக் கொண்டு நீண்ட காலம் இங்கு வாழ்ந்தார்.

அத்துடன் , பல சமூக சேவைகளை கனடாவிலும், தனது பிறப்பிடமான தோப்புர் போத்தி பிள்ளையார் தேவஸ்தானத்துக்கும் அரும் சேவையாற்றிய அவர் ஒரு சர்வதேச கவிஞர் என்ற பட்டத்தையும் பெற்றிருந்தார். கனடாவில் சில பாராளுமன்ற உறுப்பினர்களோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்து  அதன் மூலம்  தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்து  வாழ்ந்து வந்தார்.

அண்மையில் தனது 94வது வயதில் நிறைவான வாழ்லிருந்து இயற்கை எய்தினார். அவரது இறுதிக்கிரியைகள் கனடாவில் இடம்பெறவுள்ளன. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எங்களது பிரார்த்தனைகள். 

அனுதாபம் தெரிவிக்க விரும்புவோர் அவரது புதல்வருடன் 416 712 5598 என்னும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்