இத்தனை போர் ஏனோ? நாளை மாறும் நாளும் மாறும் இங்கே எதுவும் இன்னும் மாறலை. -நதுநிசி. இன்றைய கவிதை 28-03-2023.
#கவிதை
#அபிவிருத்தி
#இன்று
#தகவல்
#லங்கா4
#Poems
#Development
#today
#information
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago

இத்தனை போர் ஏனோ?
===========================
நாளை மாறும்
நாளும் மாறும்
இங்கே எதுவும்
இன்னும் மாறலை.
ஏறலை என்று
ஏப்பம் விட்டு
கதறலை பார்.
எல்லாம் மாறலை.
விலையும் கூட
குறைய இல்லை.
வறுமை இன்னும்
தொலைந்து போகலை.
மேகலை கூட
பூச்சூடி முடியலை.
மேகம் கூட இப்போ
பொழிய இல்லை.
பேச்சில் என்ன
நாளும் மாற்றம்.
செய்தித் தாளும்
நல்லா விற்கும்.
உண்டு உறங்கி
எழுந்து நடக்க
இத்தனை போர்.
அத்தனையும் ஏன்?
.......... அன்புடன் நதுநசி..



