மனதில் வலி இருக்க மது மயக்கம் நீங்காதோ? மலையேறி எவனோ மனம் மேகி போக. மண்ணும் மாசாகி மனிதம் சாகிறதே! - நதுநசி. இன்றைய கவிதை 31-03-2023.

மனதில் வலி இருக்க
மது மயக்கம் நீங்காதோ?
===========================
மலையேறி எவனோ
மனம் மேகி போக.
மண்ணும் மாசாகி
மனிதம் சாகிறதே!
மதத்தின் பெயரால்
மணம் கெட்ட பழமாக
மனங்கள் சிதைந்திட
மதங்கள் வாழ்கின்றன.
மழையும் பொய்த்து
மரமும் பட்டுப் போனாலும்
மடையர் திருந்தார்.
மன்னவனும் கூட தான்.
மலரும் மணம் வீசி
மலரும் இங்கே பாரும்.
மண் குடித்த நீர்
மனசாற வேர் வழி வர.
மரவுரி உடுத்து அந்த
மங்கை பதி அவனும்
மல்விகை வாசம் வர
மனையா ளதை சூடி வர.
மனிதர் மனமாற ஒரு
மடிந்த இதழ் விரித்து
மனிதராக ஒரு உயிர்
மல்லுக்கு வந்து நிற்க.
மர அணிலும் வாலை
மடிக்க மறந்து வீசியது.
மணத்தில் ஓடி வந்து
மடிந்தவர் கதை கேட்டதே!
மண்ணில் நிலையாத
மணல் புதையும்
மலமும் கூட உரமாகும்.
மண் இயல்பு காண்போம்.
மறக்க முடியாத
மனக் கசப்புக்கள்
மதுரைக்காரன் போல
மச்சம் கொள்ளும்.
மனசால் இங்கே ஒரு
மனச்சாட்சி வழி மாறல்
மயங்கிய போதையாக
மதுமயக்கம் நீங்காதோ?
........ அன்புடன் நதுநசி



