எட்டுத் திக்கிலும் தமிழ் மொழி. அன்னைத் தமிழ் மொழிக்கு தாயே! பல மொழி தோன்ற வழி மொழி ஆனதே! - நதுநசி. இன்றைய கவிதை 01-04-2023.

#கவிதை #தமிழ் #இன்று #தகவல் #லங்கா4 #Poems #Tamil #today #information #Lanka4
எட்டுத் திக்கிலும் தமிழ் மொழி. அன்னைத் தமிழ் மொழிக்கு தாயே! பல மொழி தோன்ற வழி மொழி ஆனதே! - நதுநசி. இன்றைய கவிதை 01-04-2023.

எட்டுத் திக்கிலும்
தமிழ் மொழி
*******************************

அன்னைத் தமிழ்
மொழிக்கு தாயே!
பல மொழி தோன்ற
வழி மொழி ஆனதே!

எட்டுத் திக்கிலும் 
தமிழ் மொழி தனியே!
தனக்கென சிறப்பு
தாம் கொண்டதுவே!

நானிலம் நாலுபேர்
நலம் வாழ குறளும்
நீதி நூல் தந்ததுவே!
நீதி நெறி தழைத்திட.

பாலையும் போரும்
வாழையும் வாழ்வும்
கலந்திட கருத்ததை
கருணை சொன்னதே!

காடும் வயலும் ஆங்கே
மலையும் ஆறும் சேர
கடலோடு கரையதை
கடந்து பயணம் சென்றதே!

அழகுற ஆற்றல் தனை
தன்னுள் புதைத் திங்கே
கல்தோன்ற முன் தான்
தோன்றி நின்ற மொழி.

நவநாகரீக வாழ்வு
நவக்கிரக தோன்றல்
எல்லாம் ஆனவழி 
தேட தனுள் நின்றதுவே!

தாய்மொழி இஃது
நமக்கிங்கே அஃது
உயிர் மொழி எஃதோ
இனியேது நமக்கு கவலை?

                                                                                                     ........ அன்புடன் நதுநசி.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!