காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வெள்ளி தேர் திருவிழா.ஆயிரக் கணக்கான மக்கள் சாமி தரிசனம்.

#Temple #Festival #Special Day #Tamilnews
Mani
1 year ago
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வெள்ளி தேர் திருவிழா.ஆயிரக் கணக்கான மக்கள் சாமி தரிசனம்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பிரம்மோற்சவம் கடந்த 6 தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது. தேவார பாடல் பெற்ற திருத்தலங்களில் முதன்மையானதான இந்த கோயிலின் பிரம்மோற்சவம் பங்குனி மாதம் துவங்கி 14 நாட்கள் நடைபெறும்.

ஆறாம் நாளான நேற்று இரவு சுமார் 32 அடிக்கு மேல் உள்ள வெள்ளி தேரில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தமிழகத்திலேயே இந்த அளவுக்கு உயரமான வெள்ளி தேரில் சிவனும் - பார்வதியும் ஒன்றாக அமர்ந்து காட்சி அளிப்பது இங்கு மட்டும்தான் என கூறப்படுகிறது. பெரும்பாலான வெள்ளித் தேர் திருவிழாக்களில் சிவன் மட்டுமே காட்சி அளிப்பார், அம்மன் தனியாக காட்சியளிப்பது உண்டு என கூறப்படுகிறது.

ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி வெள்ளி தேரில் எழுந்தருளி ஏகம்பரநாதர் சன்னதியிலிருந்து பூக்கடை சத்திரம், நான்கு ராஜ வீதி, கச்சபேஸ்வரர் கோவில், சங்கரமடம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி உலா வந்து பின்பு கோவிலை சென்றடைந்தது. முன்னதாக ஏராளமான பக்தர்கள் வழிநெடுகிலும் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டு தீபாராதனை காண்பித்து ஏகாம்பரநாதரை வழிபட்டு சென்றனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!