நிதி மோசடி செய்து தலைமறைவாக இருந்த சீன பிரஜைகள் குழுவொன்று கைது

#China #money #Arrest #Police #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
 நிதி மோசடி செய்து தலைமறைவாக இருந்த சீன பிரஜைகள் குழுவொன்று கைது

30 மில்லியன் பணத்தை மோசடி செய்து இலங்கை யில் தலைமறைவாகியிருந்த  28 சீன பிரஜைகள் சுற்றுலா விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் 5 சீன பெண்களும் உள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மடிக்கணினிகள் மற்றும் பெறுமதியான கைத்தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சீனாவில் இணையத்தில் சுமார் இரண்டு மாதங்களாக இந்த பண மோசடி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சர்வதேச பொலிஸார் வழங்கிய அறிவித்தலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சீன தூதரகத்தில் இருந்து மொழிபெயர்ப்பாளர் ஒருவரை வரவழைத்து சந்தேக நபர்களிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்படும் என அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4