மலசல கூட குழியில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்த இரண்டரை வயது குழந்தை

#SriLanka #sri lanka tamil news #srilankan politics #Lanka4 #srilanka freedom party #Sri Lanka President #Tamilnews
Prabha Praneetha
3 years ago
மலசல கூட குழியில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்த இரண்டரை வயது குழந்தை

இரண்டரை வயது ஆண் பிள்ளையொன்று மலசல கூட குழியில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சோக சம்பவமொன்று அம்பாறை – அக்கரைப்பற்று நாவற்காடு பிரதேசத்தில் நேற்று மாலை பதிவாகியுள்ளது.

உயிரிழந்த பிள்ளையின் தந்தை வெளிநாட்டில் தொழில் புரிந்துவரும் நிலையில் இரு பிள்ளைகளின் தாயும் உயிரிழந்த பிள்ளையும் அயலில் உள்ள உறவினர் வீடொன்று வழமைபோன்று சென்றுள்ளனர்.

அங்கு அப்பிள்ளையின் தாயார் உறவினர்களுடன் இணைந்து சிறு வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் யாரும் அவதானிக்காத சந்தர்ப்பத்தில் பிள்ளை வெளியேறியுள்ளது.

வெளியேறிய பிள்ளை அருகில் இருந்த வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்ட மலசல கூட குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது .

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4